Categories
உலகசெய்திகள்

இன்று கூடுகிறது “இலங்கை நாடாளுமன்றம்”…. எதிர்க்கட்சிகளின் திட்டம் இதுதான்…. வெளியான தகவல்….!!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணியளவில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இலங்கையில் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொங்கி எழுந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலை கருத்தில் கொண்டு இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றத்தில் 4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இலங்கை நாடாளுமன்றம் கூடவுள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் பொருளாதார பிரச்சினைகள் குறித்த கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |