Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 நாட்கள்…. அமமுக வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் இருபத்தி ஒரு சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது.

600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இதற்கு அதிமுக உள்ளிட்ட பல கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகமெங்கும் 10 நாட்களுக்கு அமமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி பத்து நாட்களுக்கு மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி தெருமுனைகளில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடியல்  தரப்போவதாக ஆட்சியை பிடித்த திமுக அரசை மக்களிடம் தோலுரித்துக் காட்டுவதாக அமமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |