Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டோகிராப் போட்ட பந்தை…. சிறுவர்களுக்கு பரிசளித்த ரகானே…. வைரலாகும் வீடியோ….!!!!

கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது ரகானே தான் கையெழுத்திட்ட பந்தை அவர்களுக்கு பரிசாக அளித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது தான் கையெழுத்திட்ட பந்தை சிறுவர்களுக்கு பரிசாக வழங்கினார். இதனை கொல்கத்தா அணியினர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சி செய்த போது ரகானே அவரது கையெழுத்தைப் போட்டு அந்த பந்தை சிறுவர்களிடம் வழங்கியுள்ளார். இந்த பந்தை பெற்ற சிறுவர்களில் ஒருவன் உற்சாகத்துடன் ரகானேவிற்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |