இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், தற்போது இருக்கும் பாஜக ஆட்சி காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இருந்த வேறுபாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறியது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் எரிபொருள்களை நிரப்ப 714 ரூபாய் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் தற்போது அது 1,038 ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்போது காரின் எரிபொருள்களை முழுவதுமாக நிரப்புவதற்கு 2,856 ரூபாய் மட்டுமே செலவானது.
தற்போது அது இரு மடங்கு அதிகரித்து 4,152 ரூபாய் செலவாகிறது. அதனைப்போலவே டிராக்டரில் எரிபொருள் நிரப்புவதற்கு 2014ஆம் ஆண்டு 2,749 ரூபாய் தேவைப்பட்ட நிலையில் தற்போது அதற்கு 4,563 ரூபாய் தேவைப்படுகிறது. லாரிக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 11,456 ரூபாய் தேவைப்பட்டது. தற்போது அதனை நிரப்புவதற்கு 19,014 ரூபாய் தேவைப்படுகின்றது. இந்த எரிபொருள் மூலமாக மக்களின் பணத்தை இந்த அரசு திருடிக் கொண்டு இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.