அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியருக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்க இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்புடன் அண்ணா பல்கலைக்கழகமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த தனித்திறன்களை வளர்க்கவும் தொழில்முனைவோராக மாற்றவும் தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என 19 இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் 1,500 மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த தனி திறன்களை வளர்க்கும் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பான எப்.ஐ.சி.ஐ.சி.ஐ உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு செனைதலைவர் பிரசன்ன மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றனர். இந்த ஒப்பந்தப்படி கேம்பஸ் முதல் கார்ப்பரேட் வரை என்ற நோக்கில் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஐந்து வாரங்களுக்கு இந்த திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.