Categories
உலகசெய்திகள்

ரஷ்யா இனபடுகொலை நிகழ்த்தியிருக்கிறது…. குற்றம் சாட்டும் பிரபல நாட்டு அதிபர்…!!!!!

புச்சாவில்  ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக உக்ரைன்  குற்றம்சாட்டி இருக்கின்ற நிலையில் ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியதாகவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்றாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்த நிலையில் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் புதைகுழியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மக்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களை சித்திரவதை செய்து ரஷ்ய படையினர் கொன்று இருப்பதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி இருக்கிறது. உக்ரைன்  ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக குறை கூறி உள்ள நிலையில் ரஷ்யா குற்றச்சாட்டுகளை மறுத்து இருக்கிறது.

Categories

Tech |