Categories
மாநில செய்திகள்

“சிவசங்கர் பாபா மனு தாக்கல்”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா, மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்க காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது சென்னை கேளம்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபாவுக்கு எதிராக மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தனக்கு எதிராக 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Categories

Tech |