மகளின் திருமணத்திற்கு பணம் கிடைக்காததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலாக்குடி பகுதியில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தனது மகளின் திருமண செலவிற்காக பலரிடம் பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் போதுமான பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சுமதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து சுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.