பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் அவர், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை பிரதமராக பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் அல்விக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் பணி அகமது தலைமையில் தான் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.