Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. ஷாங்காய்க்கு சென்ற ராணுவ வீரர்கள்…. வெளியான தகவல்……!!!!!

சீனாவில் முதல் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவின் மிகப் பெரிய நகராமான ஷாங்காயில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 2.6 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் உதவி செய்வதற்காக 2000 ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் நபர்கள் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஒரேநாளில் 13 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக கொரோநா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களில் 9,000 நபர்கள் ஷாங்காய் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

 

Categories

Tech |