Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தடையை மீறி விற்பனை….ரோந்து பணியில் போலீஸார்….3 பேர் கைது….!!

காவல்துறையினர் ரோந்து பணியின் போது  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரையில் அனுமன்தீர்த்தம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து  சென்றுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் கடையில் அரசால் தடை செய்யப்பட்டு இருந்த புகையிலைப் பொருட்களை விற்றுள்ளனர். இதனால் போலீசார்  அந்த  கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இதே போல்  சிங்காரப்பேட்டை காவல்துறையினர் காந்திநகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கே உள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்றுள்ளனர். கடையின் உரிமையாளர் நடுகடுபட்டி மாரியப்பன் மற்றும் பாவக்கல்  பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த  புகையிலை பாக்கெட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |