பிளாஸ்டி கழிவுகளை சேகரித்து கொண்டு வரும் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து மாணவர்கள் தங்களது வீடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து மரக்கன்று வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகராட்சி தலைவர் சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்ன கிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் கைலாசம், கல்லூரி முதல்வர் விக்டோரியா, டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, நகர் தி.மு.க. செயலாளர் கணேசன், வர்த்தக சங்க செயலாளர் ஆனந்த், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் எம்.எல்.ஏ. ராஜா தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து கொண்டுவந்த மாணவிகளுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.