காப்பிச் செடிகள் சாகுபடிக்கு தயாராகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் சாகுபடி விவசாயிகளின் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காப்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு அரபிக்டா, ரோபஸ்டா என்ற 2 வகை காப்பிச் செடிகள் பயிரிடப்படுகிறது. இவை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை பெய்யாததால் காபி சாகுபடியை நினைத்து விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 1 வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காபிச் செடிகள் பூத்துக் குலுங்குகிறது. இந்த ஆண்டு காபிக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.