திடீரென ஊருக்குள் புகுந்த புள்ளிமானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே உப்பட்டி பஜாரில் திடீரென ஒரு புள்ளிமான் புகுந்தது. இதைக்கண்ட தெரு நாய்கள் புள்ளிமானை விடாமல் துரத்திச் சென்றது. இதனால் அச்சமடைந்த புள்ளிமான் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கடைக்குள் புகுந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு புள்ளிமானை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு மான் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.