உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இருநாட்டு தூதர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் தனது தாக்குதல்கள் குறைக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனை இரண்டாக பிறிக்கும் எண்ணத்தில் அந்நாட்டின் கிழக்கே ரஷ்யப் படைகள் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய கவனம் செலுத்தி தனது படைகளை அங்கு குவித்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களிலிருந்து ரஷ்ய படைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து கீவ்வின் புறநகர் புச்சா உள்ளிட்ட நகரங்கள் முழுமையாக உக்ரைனில் வாசம் வந்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்யப் படைகள் உக்ரைனில் பெரும்பாலான நகரங்களில் வானுயர கட்டிடங்கள் தரைமட்டமாக்கியது மட்டுமின்றி மனிதப் படுகொலைகளை செய்து புதை குழிகளில் விசி சென்றுள்ளனர். புச்சா பகுதியில் சுமார் 410 பேரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை மற்றும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தெருக்களில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இதில் பலர் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்டிருந்தன. இவர்களில் 140 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பிற துறை நிபுணர்கள்.
இதனை தொடர்ந்து மக்கள் பலர் வீடுகளில் அடைக்தலத்தில் பதுங்கியிருந்த நிலையில் அங்கும் சடலமாக கிடந்தனர். மேலும் கான்கிரீட் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு அங்கு சிலர் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்க அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரசியா வீரர்களின் போர் குற்றங்களை வெளிப்பாடாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்கான நேரம் இது. ரஷ்ய தாய்மார்கள் கொள்ளையர்களை வளர்த்தாலும் அவர்கள் எப்படி கசாப்பு கடைக்காரர்கள் ஆனார்கள். அவர்களுக்கு ஆன்மா இதயம் எதுவும் இல்லை. ரஷ்ய படைகள் உக்ரைனில் செய்யும் ஒவ்வொரு குற்றங்களையும் விசாரிக்க சிறப்பு நீதி விசாரணை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ள மற்றும் நகரங்களிலிருந்து வெளியேற்றபட்டால் அங்கும் பல கொடுமைகள் வெளிப்படும்” என்று கூறியுள்ளார். இருப்பினும் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.