நாட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக “சப்- மிஷன் ஆன் அக்ரிகல்சுரல் மெக்கானைசேஷன்” எனப்படும் ஒன்றிய நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வகைகளைப் பொறுத்து செலவில் 40 முதல் 50 சதவீதம் வரை இயந்திரங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை இளம் விவசாய தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், விவசாய மின்சாரம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும், மேலும் சிறிய நிலம் மற்றும் தனிநபர் உரிமையின் அதிக விலை காரணமாக ஏற்படும் பாதகமான பொருளாதாரங்களை சமநிலைப்படுத்த இந்தத் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் திட்ட மதிப்பீட்டில் 80 சதவீத நிதி உதவி கிராம அளவிலான பண்ணை இயந்திர வங்கிகளை அமைப்பதற்காக கூட்டுறவு சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பஞ்சாயத்து களுக்கும் பத்து லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.