அமெரிக்காவில் உள்ள சீக்கியர் கோவிலான குருத்வாராவுக்கு நிர்மல் சிங் என்ற 70 வயது முதியவர் சென்றுள்ளார். இதையடுத்து அந்த முதியவர் குயின்ஸ் என்ற பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படத்தில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவரின் ஆடை மற்றும் தலைப்பாகையில் ரத்தம் காணப்படுகிறது.
இதுகுறித்து நியூயார்க் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சீக்கிய அமைப்பு, தலைப்பாகை அணிந்து சென்ற சீக்கிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.