சிம் கார்டுகள் எதுவும் இல்லாமல் இ.சிம் எனப்படும் டிஜிட்டல் சிம்களை பயன்படுத்தக் கூடிய வகையிலான போன்கள் சந்தையில் உள்ளன. இருந்தாலும் இந்த இ.சிம் தொழில்நுட்பத்தில் 2 இ.சிம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் கூகுள் தற்போது வெளியிட உள்ள ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டில், இ.சிம் வசதியை மேம்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு MEP (multiple enabled profiles) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் பயன்படுத்த உள்ளது.
இதற்கான காப்புரிமை 2020ஆம் ஆண்டு கூகுள் பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இ. சிம்களை பயன்படுத்த உதவி செய்யும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவில் சிம்கார்டு ஸ்லாட்டுகளே இல்லாத பிக் செல்போன்களை கூகுள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மினி உள்ளிட்ட போன்களில் 2 இ சிம்கள் அல்லது ஒரு நேனோ சிம் மற்றும் ஒரு இ- சிம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. தற்போது கூகுளின் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் மூலமாக இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.