ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இப்போது நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 41-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் தகுந்த பதிலடி கொடுக்கிறது. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் ஆயுத உதவிகளும் செய்து வருகின்றன.
மேலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்ய அரசு தங்களிடம் கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் மற்ற நாடுகள் தங்கள் நாட்டு ரூபெல் பணத்தில் தான் வாங்க முடியும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
அப்படியில்லை எனில், ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணையும், எரிவாயுவும் நிறுத்தப்படும் என்று எச்சரித்தது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் நிதி மந்திரி ரஷ்ய நாட்டிடமிருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்குவதை உடனே நிறுத்த முடியாது. அதற்கு சில காலங்கள் தேவைப்படும் என்று கூறியிருக்கிறார்.