Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: “தமிழ்நாட்டில் சொத்துவரி குறைவு தான்”…. அமைச்சர் கே.என்.நேரு புதிய விளக்கம்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% சொத்துவரி உயர்கிறது. 600 முதல் 1800 சதுர அடி பரப்புள்ள கட்டடங்களுக்கு 75% சொத்துவரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம். 1801 சதுர அடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் சொத்து வரி குறைவு தான் என்றும், ஏழை நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். பெருமா திமுக ஆட்சி காலத்தில் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது, மத்திய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதல்களின் படி யே சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 7% வீடுகளுக்கு மட்டுமே 50 முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |