நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் நெல்லையில் ஒரு தியேட்டரில் இப்படத்தின் ட்ரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் தியேட்டரை சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இலவசமாக ட்டைலர் வெளியானதால் ரசிகர்கள் கண்ணாடியை உடைத்து திரையரங்கிற்குள் சென்றனர். பின்பு இருக்கைகளில் எழுது நடனமாடி சேதப்படுத்தியுள்ளன. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது. “தியேட்டர்களில் திரைப்படங்கள் மட்டும் வெளியிட வேண்டும். மேலும் இலவசமாக ட்ரெய்லரை வெளியிடும் போது ஏற்படும் சேதங்களுக்கு திரைப்பட உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதனால் பிரச்சனைகள் ஏற்படும் போது திரையரங்கு உரிமையை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்” என்று எச்சரித்துள்ளார்.