ஸ்வீடனில் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீடுகளிலிருந்து பராமரிப்பு பெறுவோர், ஆகியவர்களுக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லால் 18 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்த போதும் ஸ்வீடனில் பொது முடக்கம் என்ற ஒன்றை மக்கள் அறிந்ததில்லை. இதற்கு காரணம் தனிநபர் பொறுப்புடமை தான் என அதில் கூறப்பட்டுள்ளது.