கோவிலுக்கு சென்ற குடும்பம் பூச்சி கடித்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவளைக்கால் கிராமத்தில் சாத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் அமைந்துள்ள வீராசாமி கோவிலுக்கு பொங்கலிட்டு சாமியை வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் உள்ள ஒரு மரத்தடியில் பொங்கலிட்டு உள்ளனர். அப்போது திடீரென மரத்திலிருந்த கதண்டு பூச்சிகள் சாத்தையா, சாந்தா, சிவகார்த்திகேயன், சாய் ராஜ், தர்ஷன், கார்த்திக் ஆகியோரை கடித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த 6 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.