எரிந்த நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் குளம் வெள்ளானைப்பட்டி காட்டுப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் ஒரு ஆண் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் அதே பகுதியில் வசிக்கும் சரவணகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது மர்மநபர்கள் அவரை எரித்து கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.