பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கமிட்டியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், நகர் காங்கிரஸ் தலைவர் கோபி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செய்யது இப்ராகிம், வக்கீல் பிரிவு தலைவர் அன்புச்செழியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.