ஊரக வளர்ச்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இவர் பாதியில் நின்ற பணிகள் தொடங்கி வைத்ததோடு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவர் துண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதற்காக 17.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் வள்ளி ஆற்றின் குறுக்கே 2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவளம் ஊராட்சியில் மாவட்ட பயிற்சி மற்றும் பயிலரங்க மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பெருமாள்புரம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாமில் 5.50 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனையடுத்து இலங்கை தமிழர்கள் முகாமில் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு அரங்கினை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். இந்த விழாவில் மேயர் மகேஷ், எம்.எல்.ஏ ப்ரிண்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.