காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் அயோத்தி வழக்கை விசாரணை செய்ய கூடாது என
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது ராமர் கோவில் மீதான காங்கிரஸ் கட்சியின் உண்மையான புரிதலை தெளிவாக காட்டுகிறது. ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வானலாவிய ராமர் கோவில் கட்டும்பணிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் தொடங்கப்படும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவதற்கான ஒரு சட்டம். போராட்டங்கள் நடைபெற்றபோதிலும் குடியுரிமை திருத்தச்சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி என்னுடன் பொதுமேடையில் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் செய்ய தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.