Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பெற்றோர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் , பணியாளர்கள் ஆகியோர்   கோட்டூரில் இருந்து மன்னார்குடி திருவாரூர் ஆகிய  நகரங்களுக்கு பேருந்துகளில்  செல்கின்றனர். இந்நிலையில்  பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரம் கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.

இதனால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் பலர் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாடகை வேன்களில் பள்ளி,கல்லுரி  மற்றும் பணிக்கு சென்று வருகின்றனர். எனவே கோட்டூரில் இருந்து திருப்பத்தூர் வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |