Categories
உலக செய்திகள்

“பதவி விலக மாட்டேன். பெரும்பான்மையை நிரூபியுங்கள் ஆட்சியை விட்டு தருகிறேன்.!!!!” இலங்கை அதிபர் பேச்சு…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பிரதமர் ராஜபக்சேயை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 4 புதிய மந்திரிகளை அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமனம் செய்துள்ளார்.

எனினும் அதிபர் கோட்டபயா ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டுமென மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிபர் கோட்டபயா ராஜபக்சே உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பதவியில் இருந்து தான் விலகப்போவதில்லை என்றும், எந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை கொடுக்க தயாராக உள்ளேன் என அதிபர் கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Categories

Tech |