மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெயிலடி பகுதியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநகர செயலாளர் வடிவேலு தலைமையில் நடை பெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில செயலாளர் சாமி நடராஜ், மாவட்ட குழு உறுப்பினர் குருசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் அன்பு, கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.