இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து இருப்பதை அடுத்து நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து மக்கள் நாடு முழுதும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று நாட்டின் புதிய நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது 24 மணிநேரத்துக்குள் நிதியமைச்சர் அலிசப்ரி பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.