கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் இருந்து சூசைபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மெட்டல்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.