ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும். அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல்தான் நகரத்தைச் சேர்ந்த யஷ்வந்த் கூட்டுறவு வங்கிக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதமும், மும்பையை கோகன் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கிக்கும் இரண்டு லட்சம் அபராதமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மற்றொரு வாங்கிய சமாடா கூட்டுறவு வங்கிக்கு ஒரு லட்சம் அபராதம் என்று மொத்தம் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகள் மீதான அதிரடி நடவடிக்கையால் அந்த வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பரமுல்லா மத்திய கூட்டுறவு வங்கிக்கும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.