Categories
மாநில செய்திகள்

இனி Digital Tamilnadu….. இ-அலுவலக முறைக்கு மாறுகின்றது தலைமை செயலகம்…. அசத்தும் தமிழக அரசு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ-அலுவலகம் முறைக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதல்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வருவாய் உள்ளிட்ட எட்டு துறைகளின் அலுவலகங்கள் இ-அலுவலகம் முறைக்கு மாற்றப்படுகிறது. இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

இ-அலுவலகம் என்றால் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்பதாகும். அலுவலர்கள் எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில் அரசு அமைப்புகள் மற்றும் முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இஅலுவலகம் ஆக மாற்றும் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தது தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. பழைய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் அதற்கு 25 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |