உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புச்சா மற்றும் ஒரு சில நகரங்களில் நடந்த கலவரங்களின் ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயல்வதாக கூறியிருக்கிறார்.
உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்யா குறித்து தெரிவித்திருப்பதாவது, புச்சா நகரில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மொத்த நகரத்தையும் கணக்கெடுத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். ரஷ்யா, புச்சா மற்றும் சில நகரங்களில் நடந்த கலவரங்களில் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முயல்கிறது.
அவர்கள் உண்மைகளை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அவர்களால், வெற்றி பெற முடியாது. அவர்களால் உலக நாடுகள் அனைத்தையும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும், ரஷ்ய படைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஆயுதங்கள் அனுப்ப கோரிக்கை வைத்திருக்கிறார்.