Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்….! பிரபல மலையாள நடிகர் காலமானார்….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல மலையாள நடிகரான கைனகரி தங்கராஜ் காலமானார்.

கேரள மாநிலம், கொல்லம் அருகே கேரளத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.  பிரேம்நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 35 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். இதுவே கடைசி திரைப்படமாகவும் அமைந்தது.

புகழ் பெற்ற மலையாள நாடக கலைஞர் கிருஷ்ணன் குட்டி பாகவதரின் மகனான இவர் தந்தை வழியிலேயே 100க்கும் மேற்பட்ட தலைப்பில் பத்தாயிரம் முறை மேடையேறி நடித்துள்ளார். இவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவுக்கு கேரள திரைப்படத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |