இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் இம்மாத கடைசியில் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வரும் 22ஆம் தேதியன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தருவார் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு தடவை அவர் இந்தியா வர திட்டமிட்டு கொரோனா காரணமாக வர முடியாமல் போனது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால், அவர் இந்தியாவிற்கு வருகை தருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்டு தலைவர்களிடையே தனிப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் தொலைபேசியில் விவாதிக்கப்பட்டது. அப்போது இருவரும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர். எனவே, போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வரவுள்ளார்.