மணிப்பூர் மாநிலத்தின்தமெங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிங்சிலியு என்ற 11 வயது சிறுமி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் குடும்ப வறுமையின் காரணமாக தினமும் வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் தனது சகோதரனை தூக்கிக் கொண்டு தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது சகோதரனை மடியில் வைத்துக் கொண்டும் பாடம் கவனிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சிறுமியின் குடும்பத்துக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினரை அம்மாநில ஊரகத்துறை அமைச்சர் பிஸ்வஜீத் சந்தித்து பேசினார். சிறுமிகளின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில முதல்வரின்முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.