Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று (ஏப்ரல் 5) சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளானது சமீப காலமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படி தொகையை தங்களது ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 7-வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளதாக இன்று (ஏப்ரல் 5) சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி கர்நாடக மாநில அரசும், தற்போது 24.50 சதவீத DA, 27.25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், கடந்த  2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில், மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி (DA) விகிதங்களை, 1 ஜனவரி 2022 முதல் தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தின் 24.50% லிருந்து 27.25% ஆக நடைமுறைப்படுத்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக, 2022 மார்ச் மாத சம்பளம் வழங்கப்படும் தேதிக்கு முன்,  DA நிலுவைத் தொகையை வழங்கக்கூடாது என்று கூறிய அரசாங்கம் DA என்பது ஊதியத்தின் தனித்துவமான அம்சமாக காட்டப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் அரசின் இந்த உத்தரவானது,முழுநேர அரசு ஊழியர்கள், ஜிலா பஞ்சாயத்து ஊழியர்கள், வழக்கமான ஊதிய விகிதத்தில் பணிபுரியும் பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் முழுநேர ஊழியர்கள் உள்ளிட்ட வழக்கமான ஊதிய விகிதத்தில் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |