கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஜெகதீசனை கைது செய்ததோடு 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.