மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது.
இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என மாணவர்கள் கையில் பாதகைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்செல்வம், ஆசிரியர் பயிற்றுநர்கள் சாந்தகுமாரி, ரேஷ்மா, ரம்யா, சாரதா, அரசி, ஆறுமுகம், கோமதி, ராஜலட்சுமி, சரண்யா, புஷ்பா, மருத்துவர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.