முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோடுகிளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின்னர் ஜோதிமலை இறைபணி நிறுவனர் திருவடில் குடில் சுவாமி அவர்கள் பணியை தொடங்கி வைத்தனர். இந்த பூஜையில் மெலட்டூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.