கிருஷ்ணகிரி மாவட்டம் எலசகிரியை பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அஸ்வதி மற்றும் மகன் மகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் தளியில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயம் பேளகொண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சச்சின் ஆகிய இருவரும் வேறொரு மோட்டார் சைக்கிளில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிளின் மீதும் ஓசூரில் இருந்து தளியை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மஞ்சுநாதன் மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 5 பேரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மஞ்சுநாத் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.