Categories
தேசிய செய்திகள்

1முதல் 9,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு…முக்கிய அறிவிப்பு…!!!

1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வானது ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்பட்டு மே மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என புதிய ஜிஆர் அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பெரும் சீரழிவை சந்தித்து உள்ளது. இதனால் மாணவர்களின் நேரடி கல்வி முறையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலம் நடந்தது. இந்நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு  குறைந்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து பள்ளிகளில் மாணவர்களின் கல்வி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான வகுப்புகளானது வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை ‘முழு வேலை நாளாக’ செயல்படும் என மகாராஷ்டிரா   கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மகாராஷ்டிர அரசின்  அரசின் இணைச் செயலர் ஐ.எம்.காசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பள்ளிகள் அரைநாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னார்வத்துடன் செயல்படுவதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் முழு நாளாக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வானது ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்பட்டு மே மாதத்திற்குள் அந்த தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த அறிவிப்பினை பிப்ரவரி மாத இறுதிக்குள் அரசாங்க வெளியிட்டிருக்க வேண்டும் என புனே மாவட்ட முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்சந்திர கெய்க்வாட் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள்,ஏற்கனவே தேர்வுகளை நடத்தி அதற்கான ஆயத்தங்களை முடித்து தற்போது கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜி.ஆர் கல்வித்துறை, மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க பள்ளிகளை கேட்டுள்ளது, ஆனால் தேதி வழங்கப்படவில்லை மற்றும் காலக்கெடு இருந்திருந்தால், பள்ளிகளுக்கு திட்டமிடுவது எளிதாக இருந்திருக்கும் எனவும்  கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும் சாதாரண பாடத்திட்டத்தில்,ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள், மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள்  முடிந்து, அதன்பின் விடுமுறைகள் தொடங்கும். ஆனால் தற்போது இந்த புதிய ஜிஆர் மூலம், ஏப்ரல் மாத இறுதி வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |