Categories
அரசியல்

நீங்க வீடு வாங்க வேண்டாம்…. ஆனா வீடு உங்களது…. வாடகையும் கூடவே வரும்…. இப்படி கூட முதலீடு செய்யலாம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்க வேண்டுமென்று பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ரியல் எஸ்டேட் என்பதே நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துக்கள் தொடர்புடையது என்பதால், அனைவரும் நேரடியாக முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியாது. அது அவ்வளவு சுலபமானது அல்ல.

ஆனால் சாதாரண சிறு முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து எப்படி சம்பாதிக்கின்றனர்? இதற்காகவே ரெய்ட்ஸ் நிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த நிதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு செபி அனுமதியும் உண்டு. ரெய்ட்ஸ் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ரெய்ட்ஸ் என்பது ரியல் எஸ்டேட்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போன்றது.

ஒரு மியூச்சுவல் ஃபண்டில் பல சிறு முதலீட்டாளர்கள் இணைந்து பணம் போடுகிறார்கள். அந்தப் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு லாபம் கிடைக்கின்றது. இதனைப் போலவே ரெய்ட்ஸ் வீதியில் பல சிறு முதலீட்டாளர்கள் சிறு சிறு தொகையாக முதலீடு செய்வார்கள். அந்தத் தொகையை வைத்து அலுவலக கட்டிடங்கள், ஷாப்பிங் மால் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றை கட்டமைக்கப்படும்.

அதன்பிறகு அதிலிருந்து கிடைக்கும் வாடகைப் பணம் உங்கள் முதலீட்டுக்கு ஏற்ப பிரித்து தரப்படும். நீங்கள் சிறு சிறு தொகையாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் இந்த நிதிகளில் ஈசியாக முதலீடு செய்து பயன்பெறலாம்.

Categories

Tech |