Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவசாயி…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இதே ஊரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அரசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக அரசு குடும்பத்தினரை வெங்கடேசன் மற்றும் சிலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். எனவே அரசு வெங்கடேஷிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் அரசுவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அரசுவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அரசு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி  காவல்துறையினர் வெங்கடேசன் உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரசுவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களிடம் பொதுமக்கள் அரசுவை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த அரசுவின் குடும்பத்தினருக்கு  இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு உட்பட்டு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |