சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் இந்த நிறுவனங்களில் பணிகள் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Categories