Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில்…. சிறப்பாக தொடங்கிய சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற கோவிலின் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தலுடன் சிறப்பாகத் தொடங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெறும்.

இந்த திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கண் திறப்பு, திருநங்கைகளுக்கு தாலி கட்டுதல் மற்றும் தேரோட்டம் நடைபெறும். இந்த விழா வருகிற 22-ஆம் தேதி பட்டாபிஷேகத்துடன் முடிவடைகிறது.

Categories

Tech |