முன்னதாக நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனிப் பெயரை தக்க வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் முதலில் குணசித்திர வேடத்தில் தோன்றி பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
தலைவர் Stage performance@rajinikanth pic.twitter.com/FBnd48CESE
— 🤘🤘Senthil 🤘🤘🤘 (@Senthilarumuga5) April 2, 2022
ஒரு காலகட்டத்தில் தான் நடிக்கும் படத்தின் அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு வந்த ரஜினி மேடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டோகாரன் பாடலுக்கு ரஜினி மேடையில் நடனம் ஆடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.