சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தையை தோட்டத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் கேசவன் சிறுமியின் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி திருக்கோவிலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.